உயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள்?

உணவுகள் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று .

ஆனால் சில அதே உணவுகளை நாம் பச்சையாக சாப்பிடும் போது நமக்கு நிறைய ஆபத்துகள் வருவது நிச்சயம்.

பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள சில தீங்கு விளைவிக்கும் பொருட்கள் நம் உடல் நலத்தை கெடுத்து உயிருக்கே உலை வைத்து விடும் என்று எச்சரிக்கை விடுவிக்கின்றனர் மருத்துவர்கள்.

அப்படியான சில உணவுகள்.

கசப்பு பாதாம்

கசப்பு பாதாமிலும் சயனைடு உள்ளது. அமெரிக்க போன்ற நாடுகளில் இதன் விற்பனையை தடை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிப்பு பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பன்றி இறைச்சி

பச்சையாக இருக்கின்ற பன்றி இறைச்சியில் சால்மோனெல்லா, ஈகோலி மற்றும் லிஸ்டெரியா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

சமைக்காத பன்றி இறைச்சியை தொட்ட கத்தியில், பாத்திரத்தில் கூட இந்த ஒட்டுண்ணிகள் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. கண்டிப்பாக பன்றி இறைச்சியை 145 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் 3 நிமிடங்கள் சமைத்து சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் இந்த ஒட்டுண்ணிகள் அழிய வாய்ப்புள்ளது.

சிப்பிகள்

சிப்பிகள் தண்ணீரில் இருப்பதால் இதில் நிறைய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் வாழ்கின்றன. இதை நீங்கள் சமைக்காமல் சாப்பிடும் போது அதையும் சேர்த்து தான் சாப்பிடுகிறீர்கள். இது வைபிரோஸிஸ் என்ற தொற்றை பரப்புகிறது. மேலும் இது ஹெபடைடிஸ் ஏ வைரஸை பரப்பி கல்லீரல் நோயை ஏற்படுத்துகிறது. எனவே சிப்பிகளை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள்.

கெவிட்சி உணவுகள்

கெவிட்சி என்பது மீனை சமைக்காமல் அப்படியே எலும்பிச்சை ஜூஸ் பிழிந்து சாப்பிடும் ஒரு வகை உணவு. இதிலுள்ள பாக்டீரியா மற்றும் பாராசைட்ஸ் போன்றவை உணவை நஞ்சாக்குகிறது.

எனவே இந்த மாதிரியான உணவுகளை கருவுற்ற மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக கடல் வகை மீன்களை 145 டிகிரி பாரன்ஹீட்டில் வைத்து சமைக்க வேண்டும். 16 5 டிகிரி பாரன்ஹீட் வரை கூட நீங்கள் சமைக்கலாம்.