ஜப்பானியர்களின் இளமையின் ரகசியம் அம்பலம்!

உலகில் ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு உடல் அமைப்புடனும், உளவியல் தன்மையுடனும் இருப்பார்கள். ஒரு நாட்டினரின் உடல் மிகவும் மென்மையானதாக இருக்கும்.

வேறு சில நாட்டினரின் உடல் அமைப்பு மிகவும் கடினமாக இருக்கும். சிலர் கருப்பாகவும், சிலர் வெள்ளையாகவும் இருப்பார்கள். ஆதலால், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு தன்மை உள்ளது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு புவியியல் ரீதியான காரணம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் அவர்கள் கடைபிடித்து வருகின்ற சில உணவு முறையும், ஆரோக்கிய முறையும் தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

அந்த வகையில் ஜப்பானியர்களின் ஆரோக்கியத்தையும், புத்தி கூர்மையையும் பார்த்து பல நாடுகள் செய்த ஆய்வில் சில அற்புதமான விடைகள் கிடைத்தது. அவற்றை பார்த்து தமிழர்களும் வியக்கின்றனர். ஏன் என்றால் தமிழர்கள் தான் ஆதிகாலத்தில் உணவே மருந்து என்று வாழ்ந்து காட்டியவர்கள்.

ஜப்பானின் கலாசாரம் எப்படி..?

மற்ற நாட்டு மக்களை போன்றே ஜப்பானியர்களும் தங்களது பண்பாட்டையும் கலாசாரத்தையும் பெரிதும் மதிப்பார்களாம். அவர்களின் முன்னோர்களின் வழியே முதன்மையானதாக மக்கள் போற்றி வணங்குவர். குறிப்பாக அவர்களின் மருத்துவ முறை மற்றும் உணவு முறையே மிகவும் பிரசித்தி பெற்றதாம்.

விஞ்ஞானிகளின் கருத்து என்ன..?

இந்த ஜப்பானிய முறை மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாம். அதாவது இது நீரை கொண்டு செய்யும் ஒரு வைத்திய முறையாகும். குறிப்பாக தினமும் 4 கிளாஸ் நீரை காலையில் எழுந்தவுடன் குடித்தாலே நீங்களும் ஜப்பானியர்களை போல அதிக ஆற்றலுடனும் கச்சிதமான உடல் எடையுடனும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உடல் எடை குறைப்பு

தினமும் 4 கிளாஸ் நீரை வெறும் வயிற்றில் குடிப்பதே ஜப்பானியர்களின் இளமைக்கும், அழகிய உடல் அமைப்பிற்கும் முதன்மையான காரணம். குறிப்பாக நீர் குடித்த 45 நிமிடம் வரை எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாதாம். நீர் குடித்த பிறகு பற்களை மட்டும் துலக்கி கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் முதலாக உடல் எடை குறைய தொடங்கும்.

சிறுநீரக பிரச்சினைக்கு முற்றுபுள்ளி

இதே போன்று தொடர்ந்து காலையில் 4 கிளாஸ் நீரை குடித்து வருவதால் வேறொரு அற்புதம் நடக்கும். அதாவது சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படாமல் இந்த் ஜப்பானிய முறை தடுக்கும். அத்துடன் சிறுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் விரைவில் குணமாகும்.

இதய நோயா..?

இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த ஜப்பானிய முறை அருமையான தீர்வாகும். குறிப்பாக இதனை தொடர்ந்து செய்து வருவதால் ஆயுள் காலம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், உடல் வலிகள், தலை வலிகள் போன்றவையும் குணமாகும்.

முக்கிய குறிப்பு
  • காலையில் நீரை குடிக்கும் போது வெறும் வயிற்றில் மட்டுமே குடிக்க வேண்டும். பல் துலக்கிய பின் குடித்தால் அதில் உள்ள பிளோரைட் தன்மை உடலில் சேர்வதால் இந்த வைத்தியம் செயல்படாமல் போய் விடுமாம்.
  • மேலும், 3 வேளை உணவு உட்கொண்ட பின் 2 மணி நேரம் நீரை குடிக்காமல் இருக்க வேண்டும்.
  • அப்போதுதான் இதன் பலன் முழுமையாக இருக்கும்