விகாரி வருடத்தில் நடுவே இருக்கும் இந்த ஆறு ராசிக்கும் அடிக்கப் போகும் ஜாக்பாட்!..

தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தில் பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. அவ்வாறாக இந்த தமிழ்புத்தாண்டில் ராசிச் சக்கரத்தில் சூரியன் நுழையும் போது கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசியுடையோர் எந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் சகலபாக்கியம் பெருகும் என பார்க்கலாம் வாங்க…

கடகம் – முத்துக்குமார சுவாமி கோவில்

கடக ராசி உடையோருக்கு சனிபகவான் தொடர்வதால் சற்று மனவுளைச்சல்கள் வந்துசெல்லும். ஈரோடு மாவட்டம், பவளமலையில் உள்ள முத்துகுமார சுவாமி திருக்கோவிலுக்கு தமிழ்புத்தாண்டு அன்று சென்று வழிபட்டு வர குருபகவான் மூலம் மனநிம்மதியும், உடல் ஆரோக்கியமும், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளும் அரங்கேறும்.

சிம்மம்- கார்க்கோடகேஸ்வரர் திருக்கோவில்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 12ல் ராகுவும், 6ல் கேதுவும் தொடர்வதால் வீட்டில் மகிழ்ச்சிகரமான விசேச நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத வகையில் தொழிலில் லாபம் அடைய அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், மறைமுக எதிரிகளால் சில தடங்கல்களும் ஏற்படும். இதனைத் தவிர்க்க அரியலூரில் உள்ள அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.

கன்னி- தகட்டூர் பைரவர்

இந்த ஆண்டு தொடக்கம் முதல் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ராகு இருப்பதால் எத்ததனை பிரச்சனைகள் வந்தாலும் அதனைக் கடந்து செல்லும் மனவலிமை கிடைக்கும். இருப்பினும் 4யில் சனி தொடர்வதால் நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரில் எழுந்தருளியுள்ள பைரவரை வழிபடுவது மேலானது. இதனால், செல்வாக்கும், பங்குச் சந்தையில் நல்ல வரவும் கிடைக்கும்.

துலாம் – ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவில்

துலாம் ராசியுடையோருக்கு சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் போட்டியாளர்களிடம் வெற்றிபெருவீர்கள். இருப்பினும், ராகு, கேதுவுன் பார்வை அதிகமாக உள்ளதால் ஆளுமை திறன் குறைந்து பகை வளரும சூழல் ஏற்படும். இதில் இருந்து விடுபட கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடத்தில் உள்ள ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

விருச்சிகம்- மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்

விருச்சிகம் ராசிக்குள்ளேயே குரு வருவதால் அனாவசிய அலைச்சல் குறைந்து பங்குதாரர்கள் மூலம் வரவு பெருகும். மேலும், ராகு 9ல் உள்ளதால் குடும்ப பெரியவர்களின் உடல்நலன் குறையும். இதில் இருந்து விடுபட திருச்சியில் உள்ள அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பரிகார பூஜை செய்து வர ஆரோக்கியம் பெருகும்.

தனுசு – தியாகராஜர் திருக்கோவில்

மே 14 அன்று சுக்கிரன் மறைந்து ராகுவும், கேதுவும் ராசிக்குள் நுழைவதால் அனாவசியமான வாக்குவாதம், சந்தேகம், மன அமைதியின்மை உள்ளிட்டவை அதிகளவில் காணப்படும். திருவாரூரில் தியாகராஜர் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வர தேடிவந்த ராகு தெறித்து ஓடும்.