இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமது நாட்டு பிரஜைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமது நாட்டு பிரஜைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அந்நாட்டு வெளிவிவகார அறிவுறுத்தியுள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கையில் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு செல்வதை தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் கேட்டுள்ளது.

இலங்கையில் சாதாரண சூழ்நிலை ஏற்படும் வரையில் அந்நாட்டுக்கான பயணங்களை இரத்துச் செய்யுமாறு சுவிஸ் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.