உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடாத்துவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடாத்துவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதி வழிபாடு இன்று கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலயத்தில் இவ்வாறான பலத்த பாதுகாப்பின் மத்தியிலேயே இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 4 மணியளவில் தேவாலயத்தில் இறுதி வழிபாட்டிற்காக உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஆராதனை இடம்பெற்றது. தேவாலயத்தில் படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதுடன், வெளியில் இரு பவல் வாகனங்களில் படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் எதிரொலிப்பாக தேவாலயங்களில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையை தொடர்ந்து படையினரின் இரு பவல் வாகனங்களின் நடுவில் சடலம் நல்லடக்கத்திற்காக எடுத்து செல்லப்பட்டமையையும் அவதானிக்க முடிந்தது.