தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அறிவிப்பு

நடிகர் நாசர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில், இன்று முதல் தேர்தல் வேலைகள் நடைபெறவுள்ளது என்றும், நடிகர் சங்க கட்டட வேலைகள் விரைவாக நிறைவடையவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகத்தின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதன் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நேற்று( ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரியவருவதாவது, “இந்த செயற்குழு கூட்டத்தில் 2015 தொடக்கம் 2018இற்கான நிர்வாகத்தின் பதவிக்காலம் 2019 இம்மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றது.

புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க தேர்தல் நாள், தேர்தல் நடக்கும் இடம், மற்றும் தேர்தல் அதிகாரி தலைமையில் தேர்தல் நடத்துவது, தேர்தல் சம்பந்தமான அறிக்கைகளை உறுப்பினர்களுக்கு பொதுச்செயலாளர் தெரியப்படுத்துவது போன்ற அனைத்திற்கும் நிர்வாக குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என அதில் குறிப்படப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஸ்ரீமன், ரமணா, உதயா, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.