உகாண்டாவில் 39 வயதில் 44 பிள்ளைகளைப் பெற்ற அதிசய பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
12 வயதில் திருமணம் செய்துகொண்ட மரியம் நபடன்ஸிக்கு இப்போது 39 வயதாகின்ற நிலையில் அவருக்கு 44 குழந்தைகள் உள்ளன.
6 பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள், 4 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள், 5 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் அவருக்கு பிறந்துள்ளது.
அதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டன. தற்போது மரியம் 38 பிள்ளைகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார்.
முதல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தவுடன் மரியம் மருத்துவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். மரியமின் கருப்பைகள் பெரிதாக இருந்ததால், கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் என்று மருத்துவர் கூறினார்.
3 வருடங்களுக்கு முன், திருமதி மரியமை அவரின் கணவர் கைவிட்டுவிட்டார்.
மரியம் தனது 38 குழந்தைகளை தனி ஆளாக வளர்க்க பல வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.
அதிலிருந்து வரும் சிறிதளவு பணம் பிள்ளைகளின் அடிப்படை தேவைகளுக்கே சரியாகப் போய்விடுகிறது என்று புலம்புகிறார் திருமதி மரியம்.