கணவனுக்கு பணிவிடை செய்வதே மனைவியின் முக்கிய கடமையாகும்.
ஒரு பெண் தந்தை, கணவன், புத்திரனை விட்டு தனித்திருக்க விரும்பக்கூடாது.
கணவன் சம்பாதித்து கொண்டு வந்து தரும் தனத்தை சிக்கனமாக செலவு செய்து மீதியை சேர்த்து வைப்பது மனைவியின் முக்கிய கடமையாகும்.
களைத்து வரும் கணவனை சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும்.
ஒருவன் ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், குடிசையில் வாழ்ந்தாலும் , பெரிய மாளிகையில் வாழ்ந்தாலும் அந்த இல்லத்திற்கு அவன் மனைவி தான் அரசி. அதனால் தான் மனைவியை “இல்லத்தரசி” என்கிறோம்.
வீட்டுக்குள் மனைவியின் சாம்ராஜ்யம் தான். வீட்டில் எத்தனைபேர் வேலைக்காரர்கள் வேலை செய்தாலும் அவர்களை வழிநடத்துபவர் மனைவி தான்.
பொதுவாக பெண்கள் கணவனுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்.
அதிகாலையில் எழுந்து வீட்டின் பணிகளை திட்டமிட வேண்டும்.
கணவன் வீடு திரும்பும் முன் அறுசுவை உணவை தயார் செய்ய வேண்டும்.
சிரித்த முகத்துடன் கணவனை அனுசரிக்க வேண்டும்.
தனித்திருக்கக் கூடாது.
எக்காலத்திலும் உரக்க பேசக்கூடாது, சத்தமாக சிரிக்கக் கூடாது.
எக்காரணம் கொண்டும் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் பொருட்கள் கொடுக்கல் வாங்கல் கூடாது.
தனியாக வெளியே உலாவக்கூடாது.
கணவன் இல்லாத நேரம் ஆடம்பர அணிகலன்கள் அணியக்கூடாது.
மனைவிக்கு தெரிந்திருக்க வேண்டிய மூன்று முக்கிய விடயங்கள்.
கணவரின் முன் மலர்ந்த தாமரை போல் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்.
வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நல்ல ருசியான உணவை சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வீட்டை விளங்கச் செய்வதும் சந்ததிகளை உருவாக்குவதும் பெண்கள் என்பதால் அவர்கள் குலவிளக்கு என்று போற்றப்படுகிறார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் கிரகலட்சுமிகள். இதற்கு மேல் அவர்களைப் போற்ற வார்த்தை எது?
பிள்ளைகளைப் பெறுவதும் பெண்தான், அதை வளர்ப்பவளும் பெண்தான். ஒரு குடும்பத்தைக் கட்டுக் கோப்பாய் நடத்துபவளும் பெண் தான். உலக வாழ்வின் அஸ்திவாரமே பெண்தான்.
மொத்தத்தில் கணவனுக்கும், அவன் முன்னோர்களுக்கும் சொர்க்கலோகம் கிடைக்கச் செய்பவள் அவன் மனைவியே ஆவாள். அதனால் தான் அவள் தன் தர்மத்தின்படி கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும்.
ஆகையால் தான் நம் இந்து தர்மத்தில் “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று கூறியுள்ளனர்.
மொத்தத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று குரு சாது சாஸ்திரம் சொன்ன படி வாழ்க்கை வாழ வேண்டும்.