அலுவலகம் செல்லும் பெண்கள் உடை விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். பெண்களின் உடை, நடை, பாவனைகளை வைத்தே அவர்களது குணநலன்களை பலரும் கணிக்கிறார்கள்.
அலுவலகம் செல்லும் பெண்கள் உடை விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் பெண்களின் உடை, நடை, பாவனைகளை வைத்தே அவர்களது குணநலன்களை பலரும் கணிக்கிறார்கள். அதனால் உடை அலங்காரத்தில் உஷாராக இருக்கவேண்டும்.
பெண்கள் உடை அலங்காரத்தில் எப்படி சிறந்து விளங்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், உடலமைப்பிற்கேற்ற உடைகளை அணிவது அவசியமானது. அவர்கள் பொதுவாக செய்யும் தவறு என்னவென்றால் இறுக்கமான உடைகளை அணிந்துவிடுகிறார்கள்.
அல்லது அதிக தளர்வான உடைகளை உடுத்திக்கொள்கிறார்கள். மார்டன் உடையாக இருந்தாலும், பாரம்பரிய உடையாக இருந்தாலும் அது பெண்களின் உருவத்தை அழகாக, கச்சிதமாக காட்டுமாறு அமையவேண்டும்.