இன்று பெரும்பாலேனர் உடலில் தங்கியிருக்கு கொழுப்புகளை குறைக்க பெரும்பாடுபட்டு கொண்டு உள்ளனர்.
இதற்காக பலரும் விபரீதமான முறையில் உடல் எடை குறைப்பு மருந்துகள், பானங்கள் போன்றவற்றை இந்த சந்ததியினர் எடுத்து கொள்கின்றார்கள். இருப்பினும் இது பின்னடைவில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.
இதற்கு இயற்கை முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் உடல் எடையினை குறைக்க பல வழிகள் உள்ளது.
அந்தவகையில் மிளகு, தக்காளி சாறு, இஞ்சி போன்றவற்றை கலந்து செய்யப்படும் பானம் உடல் எடையை குறைப்புக்கு பெரிதும் உதவி புரிகின்றது.
உடலில் உள்ள நச்சுக்கள் உங்கள் சக்தியைக் குறைத்து உங்களை நாள் முழுவதும் சோர்வாக உணரவைக்கும் சக்தி இந்த அற்புத பானத்திற்கு உண்டு.
மேலும் இது உடலில் உள்ள அதிகமான கொழுப்பையும் நீக்குகின்றது.
தற்போது இந்த அற்புத பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை
- மிளகு
- துருவிய இஞ்சி
- தக்காளி சாறு
- எலுமிச்சை சாறு
- செலரி இலைகள்
செய்முறை
முதலில் மேலே குறிப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.
பின்னர் இந்த கலவை அடியில் நன்கு தேங்கியவுடன் தெளிவான நீரை வேறொரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இறுதியாக செலரி இலைகளை இந்த பானத்தின் மீது போடவும்.
இந்த பானத்தை குடிக்கும் போது செலெரி இலைகளை சாப்பிட்டுக் கொண்டே குடிக்கவும்.
இந்த அற்புத பானத்தை இதை தினமும் காலையிலும், மாலையிலும் இரவிலும் பருகிவர நல்ல பலன்கள் தெரியும். அதுமட்டுமின்றி அடியில் தேங்கியுள்ள பொருட்களை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.
இந்த பானத்தை குடிப்பதனால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்ல உடலில் உள்ள அதிகமான கொழுப்பையும் நீக்குகின்றது.