தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சாஹ்ரான் ஹாசிமின் தொலைபேசிக்கு தமிழகத்தில் இருந்து அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இது உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியிருந்த போதிலும், அதனை உள்ளூர் அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் வழிநடத்தியிருந்தது. இதனால் அந்த அமைப்பிற்கு தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் சாஹ்ரான் ஹாசிமின் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவராகும். இவர் தற்கொலைப் படை தாக்குதலின்போது, இறந்துவிட்டதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சாஹ்ரான் ஹாசிமின் தொலைபேசிக்கு வந்த அழைப்பு ஹிஸ்ட்ரியை,பொலிஸார் ஆய்வு செய்து பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.