நாட்டின் தலைவர்களை ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டாம் என அரச புலனாய்வுச் சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையின் பல்வேறு இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தும் சாத்தியங்கள் உள்ளதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்தே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்கள், ஆலயங்கள், ஏனைய மதவழிபாட்டு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் நாட்டின் தலைவர்கள் பங்கேற்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசியம் பங்கேற்க வேண்டுமாயின் உலங்குவானூர்திகளில் பயணம் செய்யுமாறு புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.