“லிப்ட் வேணுமா வாங்க., ஆனா எனக்கு அது வேணும்” கொடூர செயலில் ஈடுபட்ட அரக்கன்!

புவனகிரி மாவட்டம் ஹாஜிப்பூர் என்ற கிராமத்தில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளிக்கவே போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அதன் பின்னர், அங்குள்ள சீனிவாச ரெட்டி என்பவருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில், அந்த மாணவியின் பையை கண்டறிந்துள்ளனர். அந்த கிணற்றில் இருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அந்த மாணவியின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குற்றவாளியான சீனிவாசனிடம் விசாரணை நடத்தவே, மேலும், ஒரு பெண்ணை கொலை செய்து அந்த கிணற்றில் புதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து எலும்புக்கூடு ஒன்று தோண்டி எடுக்கப்பட்டது. அவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிகாம் படித்த பெண் என்பது தெரியவந்தது. அவரும் காணாமல்போயுள்ளார். ஆனால், காதல் விவகாரம் என நினைத்து அவரது பெற்றோர் காவல் துறைக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளதால் இது வெளியில் தெரியாமல் போய்விட்டது.

சீனிவாசன் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளை லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதேபோல 2015ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.