பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ வெல்ஹோ என்ற இடத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையின் குறுக்கே ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு சாலையை கடந்து ஊர்ந்து சென்றுள்ளது.
அந்த பாம்பு கிட்டத்தட்ட 3 மீட்டர் நீளமும் 30 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. ஆரக்கிள் உள்ள காட்டிலிருந்து நெடுஞ்சாலைக்கு நடுவே வந்த அந்த பாம்பு அசால்ட்டாக சாலையை கடந்து நெடுஞ்சாலையின் அந்த பக்கம் சென்றுள்ளது.
சாலைக்கு நடுவே இவ்வளவு பெரிய மலைப்பாம்பு ஒன்று நகர்ந்து செல்வதை கண்ட அந்த பகுதியில் சென்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்து வியந்து பார்த்தனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துவருகின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.