இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என நியூசிலாந்து பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
கிறைஸ்ற்சேர்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிறைஸ்ற்சேர்ச்சிலுள்ள இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் 40 இற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை மறுத்திருந்த நியூசிலாந்து பிரதமர் இலங்கை தாக்குதலுக்கும் நியூசிலாந்து தாக்குதலுக்கும் தொடர்பில்லை என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் அந்த கூற்றினை மறுத்து நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் நியூசிலாந்தை இலங்கை தவறாக பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஒன்றும் இல்லாமல் அடிப்படையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிறைஸ்ற்சேர்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்திருததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.