எந்தவொரு சினிமாப் பின்னணியுமே இல்லாம தமிழ் சினிமால நுழைஞ்சி தாக்குனு ஒரு தனி இடத்தை பிடிச்சிருக்காரு அஜித்குமார்.
ரசிகர்களால “தல”னு கெத்தா அழைக்கப்படுற அஜித்குமார் தெலுங்கு திரைப்டத்துல தான் முத முதல்ல அறிமுகம் ஆகுறாரு. பர்ஸ்ட்டு ஒரு துணை நடிகரா அறிமுகமாகி பின்னாடி பல கேரக்டர்ல நடிக்கிறாரூ.
தமிழ் சினி பீல்டுல நம்பர் ஒன் நடிகரா இருக்க அவரு அல்டிமேட் ஸ்டார்ன்னு அழைக்கப்படுறாரு. குழந்தை நட்சத்திரமா அறிமுகமான நடிகை ஷாலினியை கல்யாணம் செஞ்சுகிற அஜித், மூணு ஃபிலிம்ஃபேர் விருதையும், ரெண்டு சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும், மூணு விஜய் விருதையும், ரெண்டு தமிழ் மாநில அரசு விருதையும் வாங்கிருக்காரு.
ஹதராபாத்ல ஒரு தமிழருக்கும், சிந்தி இனத்தை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு மகனா பிறந்திருக்காரு. தமிழ்ல நடிக்க ஆரம்பிச்ச பிறகு தான் அஜித் தமிழே காத்துக்கிட்டாராம்.
அதிகம் படிக்காத அஜித்குமார்., அமராவதி படம் மூலமா தமிழ் சினிமால என்ட்ரி ஆகுறாரு. முதல்படம் பிளாப் ஆனாலும், அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே னு அடுத்தடுத்த படத்துல நடிக்கிறாரூ.
இதுல பவித்ரா படம் அஜித்துக்கு பிளஸ்ஸா அமையுது. அவரோட பர்ஸ்ட் ஹிட் படம்னு பாத்து ஆசை தான். அதுக்குப்பிறகு ஒரு பக் ரேஸ்ல இவருக்கு காயம் ஏற்படவே நடிக்கமா இருந்து நடிச்ச படம் தான் காதல் மன்னன்.
நடிப்பு மட்டும்தானா அப்டினு பாத்தா இல்லை. இவர் சமூகத்துக்கும் பல நல்லதா செஞ்சிட்டு வறாரு. அவர் வீட்ல வேல செய்ர 12 பேருக்கு 2014ல வீடுகட்டி கொடுக்கிறார்.
அடுத்து, பாதுகாப்பான பயணத்த வலியுறுத்தி 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரை டூவீலர்ல விழிப்புணர்வு பேரணில கலந்துக்கிறாரு.
.
இதேபோல 2014-ளையும் புனே டு சென்னை பேரணில கலந்துகிறாரூ. இப்ப 2018-ல மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியாளரா இருந்து ஒரு ட்ரான் விமானத்தை உருவாக்கி சாதனை படைச்சிருக்காரு. இதுக்கு ஆஸ்திரேலியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சில இவரோட குழு முதல் பரிசை வாங்கிருக்கறது குறிப்பிடத்தக்கது.