தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். தெலுங்கிலும் தமிழிலும் எப்போதும் கை நிறைய பட வாய்ப்புகளை வைத்திருப்பவர்.
மேலும் இவருக்கு ரசிகர்களும் ஏராளம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் காஜல் அகர்வால் கலந்து கொண்டார்.
அதில், உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது? என்ற கேள்விக்கு பதிலளித்த காஜல், கிரிக்கெட் தான், ரோகித் சர்மா தான் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர். அவரை ஒரு காலத்தில் ஒரு தலையாக காதலித்தேன். அவரது பேட்டிங், பீல்டிங் ஸ்டைல் மிகவும் பிடிக்கும் என்றார்.
மேலும் இன்று ரோகித் சர்மாவின் பிறந்த நாள் என்பது கூடுதல் தகவல்.