துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்மாந்துறை மலையடிக்கிராமத்தில் உள்ள அவரது தாயாரின் வீட்டுக்கு அருகில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட நிலையில், சந்தேகத்தில் அவர் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.