இலங்கை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பில் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னா தெரிவித்துள்ளார்.
கொழும்பிவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலைக்கொண்ட பயங்கரவாதத்தை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிய அவர், தற்கொலைப் படை தாக்குதலில் மூளையாக செயல்பட்டு இறந்த சஹரான் இந்த அமைப்பின் தலைவர் என கூறிய போதிலும், அவர் இந்த அமைப்பின் தலைவர் கிடையாது என்று கூறியுள்ளார்.
அமைப்பொன்றின் தலைவர் ஒருபோதும் தற்கொலை குண்டுத் தாக்குலை நடத்தி உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் கிடையாது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.