மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 15பேர் பலியாகி உள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு பணிக்கு சென்றுள்ளனர்.
அந்தவாகனம் மஹாராஷ்ர மாநிலத்திற்கும் சதீஸ்கர் மாநிலத்திற்கும் இடையேயான எல்லைபகுதியை எட்டியதும், நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் வாகனம் சிதறி 15 வீரர்கள் சம்பவ இடத்தில் பலியாகினர்.
மேலும் படுகாயங்களுடன் வீரர்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் மஹாராஷ்டிராவில் நிகழ்வு நடந்ததிலிருந்து 24மணி நேரத்தில் நக்சலைட்டுகளால் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று குர்கேடா பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடந்த இடத்தில் 27 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு நக்சலைட்டுகள் தீவைத்துள்ளனர்.