அனைத்து மத ஸ்தலத்திற்கும் பாடசாலைகளுக்கும் பாதுகாப்பதற்காக கூடுதல் பணியாளர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
முப்படைகளின் கட்டளை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு இந்த அறிவுறுத்தலை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து தொடர்ந்தும் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார்.