எந்தச் சிற்றுண்டி எடுத்தாலும் பத்து ரூபாவுக்கு விற்பனை செய்யும் சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் இன்று தொடக்கம் மதிய உணவு ( மரக்கறியுடனான சோறு ) 80 ரூபாவுக்கு விற்பனை செய்யவுள்ளனர்.
ஏனைய உணவகங்களில் 120 ரூபாவாக மதிய உணவு விற்பனை செய்யும் நிலையில், கூட்டுறவு சிற்றுண்டி நிலையத்தில் 80 ரூபாவுக்கு விற்பனை செய்வது குறித்து சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள அரச தனியார் வங்கிகள் போன்ற இடங்களில் பணியாற்றவோர் வரவேற்றுள்ளனர்.