மனைவிகள் எடுத்த அதிரடி முடிவு.!

இந்த உலகில் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து அவர்களை சுற்றியுள்ள நபர்களால் இழைக்கப்பட்டு வருகிறது என்ற தொடர் செய்தியானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலைக்கு மத்தியில் வாழும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவர்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா நகரில் வசித்து வரும் நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பகுதியில் ட்ராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு இணையத்தின் மூலமாக அங்குள்ள கோழிக்கோடு பகுதியை சார்ந்த நபர் ஒருவர் நண்பராகியுள்ளார்.

இந்த நட்பு பழக்கத்தின் அடிப்படையில் கோழிக்கோடு பகுதியை சார்ந்த நபரின் இல்லத்திற்கு சென்றும்., பின்னர் அவர்களும் வந்து சென்றுள்ளனர்.பின்னர் குறித்த நபருடன் என்னை தனிமையில் விட்டு., அவருடன் வருமாறும் அவரோடு உறவு வைத்துக்கொள்ளும் படியும் கணவர் வற்புறுத்தியுள்ளார்.

என்னை போன்று அந்த நபரின் மனைவியையும் அவரது நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர். அவ்வாறு அவர்கள் கூறும் நபர்களுடன் உறவிற்கு ஒத்துழைக்காதபட்சத்தில் விவாகரத்து செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளான்.

இதனையடுத்து இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில்., சபீன் என்பவர் இணையத்தில் உள்ள ஆபாச சாட்டிங் செயலின் மூலமாக சாட்டிங் செய்துள்ளார்.

இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து அவரது மனைவியை நண்பர்களுடன் தாம்பத்தியம் மேற்கொள்ள வற்புறுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்த விசாரணையில் அவர்களுக்கு சுமார் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.