பிழைப்பு தேடி பிரித்தானியா வந்த இளைஞர்: லொட்டரியில் காத்திருந்த அதிர்ஷ்டம்!

கிழக்கு திமோர் நாட்டில் இருந்து பிழைப்பு தேடி பிரித்தானியா வந்த நபருக்கு லொட்டரியில் 58,000 பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.

கிழக்கு திமோர் நாட்டவரான 33 வயது எலிசோ ஜிமேனெஸ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பு தேடி பிரித்தானியா வந்துள்ளார்.

Scunthorpe பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவுப்பணி செய்து கிடைக்கும் வருவாயை தமது மனைவி மற்றும் 2 மகன்களுக்காக தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் எலிசோ 2.70 பவுண்டுகள் கட்டணத்தில் லொட்டரி ஒன்றை வாங்கியுள்ளார்.

இதில் எலிசோவுக்கு 58,000 பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது. தற்போது சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ள எலிசோ, அங்கே உணவகம் ஒன்றை திறக்கவும் முடிவு செய்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு பிழைப்பு தேடி வந்த பின்னர் இதுவரை தமது மனைவி மற்றும் இரு மகன்களை சந்தித்ததில்லை என கூறும் எலிசோ, குடும்பத்துடன் பாலி தீவுக்கு சுற்றுலா செல்லவும் முடிவு செய்துள்ளார்.