தமிழ் மாணவியை கடத்தி IS தற்கொலை குண்டுதாரியாக மாற்றிய தீவிரவாதிகள்?

அண்மையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் நாள்தோறும் பல்வேறு தகவல் வெளிவருகின்றன.

இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாளில் தற்கொலைதாரிகள் என தெரிவித்து பொலிஸார் சிலரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த புகைப்படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண் ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது குறித்து IBC தமிழ் செய்தி சேவை சிறப்பு ஆய்வொன்றை நடத்தியிருந்தது.

அந்த வகையில் குறித்த யுவதி மட்டக்களப்பு – தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த யுவதி தொடர்பில் அவரின் தாயார் கருத்து தெரிவிக்கையில்.

எனது மகள், கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றிருந்தார். அவர் சாதாரண தரத்தில் 8A மற்றும் 1B சித்தியினை பெற்றிருந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் தனது மகள் முஸ்லிம் இளைஞர் ஒருவரால் கடத்தி செல்லப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் யுவதியின் தாயார் IBC தமிழ் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.