பெண்ணின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை… பெண்கள் சிறிய ஆடை அணிவதாலே வன்கொடுமை செய்யப்படுகிறார்கள்…

ஹரியான மாநிலம் குருகரம் என்ற பகுதியில் பெண்களின் ஆடைகுறித்து, சிறிய ஆடை அணியும் பெண்களை வன்கொடுமை செய்யுங்கள் என்று பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியான மாநிலத்தில் பெண் ஒருவர் சில பெண்கள் கடந்து வரும் போது, சிறிய ஆடை அணிந்த பெண்ணை ஆண்கள் வன்கொடுமை செய்யுங்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து அவர் சிறிய ஆடை அணிவது தவறு என்றும் சிறிய ஆடை அணிவதால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும் பேசியுள்ளார். இதனால் அந்த பெண்ணை தொடர்ந்து சென்ற இளம் பெண்கள் மன்னிப்பு கோரும்படி கூறிகின்றனர்.

ஆனால் அந்த பெண் பெண்கள் குட்டை பாவடை அணிவதாலும் கழுத்து பெரிய அளவில் உள்ள ஆடைகள் அணிவதாலுமே பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அவர் பேசுகிறார்.

இதனை தொடர்ந்து அவரிடம் சண்டைபோட்ட இளம் பெண்ணை, இவரை பெற்றோர் கட்டுப்படுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியது, பின் அந்தவீடியோ மீது புகார் வழங்கப்பட்டதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

தொடர்ந்து பெண்கள் சிறிய ஆடைகள் அணிவதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.