தலை முடி உதிர்வால் கவலையா?

தலைமுடி உதிர்வதற்கான அடிப்படைக் காரணமாக மண்டையின் மீதுள்ள உறைப்பை களில் ஹார்மோன் சுரப்பு நின்று போவதையே முதல் காரணமாகும்.

சராசரியாக ஒருவரது தலையில் 100000 முதல் 150000 வரை தலைமுடி இருக்கும். தினமும் சராசரியாக 100 முடி நம் தலையில் இருந்து உதிரும் என சொல்லப்படுகின்றது.

முடி உதிர்விற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதில் மன உளைச்சல்: போதிய தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கங்கள், மனவுளைச்சல் ஆகியவற்றால் சுரப்பிகளின் சமநிலை பாதிக்கப்படலாம்; இரத்த ஓட்டத்தில் சீர்கேடு ஏற்படலாம்.

இதற்கு கவலைபட வேண்டிய அவசியமில்லை. கீழ் காணும் முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
  • தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.
  • முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.
  • முட்டை உடைத்து பவுலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பதமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை மேற்கொள்ள வேண்டும்.
  • 4 ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.
  • அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
  • ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.