இந்தியாவில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனா கட்சியின் இந்த கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது, புர்கா என்பது இஸ்லாம் பெண்களின் பாரம்பரியம், அதனை அணிவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.
புர்கா அணியும் அனைத்து பெண்களும் பயங்கரவாதிகள் கிடையாது, எனவே இந்தியாவில் புர்கா அணிவதற்கு எந்த தடையும் இருக்காது என கூறியுள்ளார்.