அடுத்த ஜிகாடி இந்த முறை கடல் படை சீருடையுடன் சிக்கினான்…

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. எரக்கன்டி பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வழங்கிய தகவலில் அடிப்படையில் மேலும் 3 சகோதரர்களை சற்று முன்னர் கடல்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

அவர்களிடம் இருந்து 16 வோட்டர் ஜெல் ஸ்ட்ரீக், 160 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடி பொருட்களும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன. இது இவ்வாறு இருக்க, மேற்கு கடற்படையினர் வெலிசரை மற்றும் மாபோலை பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை சுற்றிவளைத்த போது , அங்குள்ள தையல் நிலையங்களில் இராணுவத்தின் வனப்பகுதிக்கு பொறுப்பான பிரிவின் அதிகாரிகளின். அணியும் ஆடையை ஒத்த பூரணமாக தைக்கப்பட்ட 140 ஆடைகளும் , 14 முழுமையாக தைத்து முடிக்கப்படாத ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இதில் கடல் படை பிரிவின் சீருடையும் அடங்குகிறது.

இவை தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டள்ளன. 140 ஆடைகள் தைக்கப்பட்டுள்ளது என்றால், 140 தற்கொலை அல்லது பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பது தான் அர்த்தம். இனி அவர்களை தேடும் வேட்டை ஆரம்பமாகும்.