ட்ரோன் கெமராவுடன் இளைஞர் கைது!

நிட்டம்புவ பகுதியில் ட்ரோன் கெமராவுடன் இளைஞர்  ஒருவரை கைது செய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவ திஹாரிய, கஹட்டோவிட்ட பகுதியில் வைத்தே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான குறித்த இளைஞர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.