கோடை காலத்தின் வெப்பத்தை குறைப்பதற்கு கொட்டை பாக்கு.!!

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தைப் பொருத்தவரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்துகொண்டு வருகிறது., கோடை காலம் துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கமானது மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் எதிர்பார்த்த அளவு பெய்யும் மழை பெய்யும் என்று அதை எதிர்பார்த்திருந்த நிலையில்., மழையும் நமக்கு டாட்டா காட்டி பொய்த்துப் போனது.

இதனால் தேவையான மழை பெய்யாமல் ஆங்காங்கே தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயமும்., கடந்த சில நாட்களாக அதிகளவு அடிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக கடும் பிரச்சனையும் சந்திக்கவேண்டியுள்ளது. பெருநகரங்களில் உள்ள சாலைகளில் செல்லும் போது வீசும் அனல் காற்றின் காரணமாக மக்கள் கடுமையான அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் வெளியில் சென்று வரும் சமயத்தில் பதற்றமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தை நாம் என்னதான் செய்தாலும் பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து முடிந்த அளவு நம்மை காத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில்., கோடை காலத்தில் ஏற்படும் நீர் கடுப்பு நீங்குவதற்கு எளிய முறையை பற்றி இனி காண்போம். நீர்க்கடுப்பு என்பது பொதுவாக நமக்கு ஏற்படும் பட்சத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் தோன்றும்., அதே போன்று சிறுநீர் கழிக்கும் சமயத்தில் ஒரு விதமான வலியும் ஏற்படும்.

இந்த வலியானது குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை நீடிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட வெளியே நண்பர்களிடமும் பகிர முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தும்., இது அதிகப்படியான வெப்பத்தின் மூலமாக நமது உடல் பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் இந்த பிரச்சனையானது ஏற்படுகிறது. இதனை நீக்க பல முறைகள் உள்ளது அவற்றில் சிறந்த வழியாக இளநீர் குடிப்பது., கரும்பு சாறு குடிப்பது மற்றும் பழச்சாறுகளை அருந்துவது போன்ற செயல்களை செய்வது மூலமாக நமது உடலில் இருக்கும் வெப்பத்தை தணித்து நமது உடலை கொஞ்சம் வெயிலின் தாக்கத்திலிருந்து கட்டுக்குள் வைக்கலாம்.

இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஒரு ரூபாய் செலவில் ஒரு எளிய முறையும் உள்ளது., அதனை இனி பார்ப்போம். இந்த முறைக்கு கொட்டைப்பாக்கு பொதுவாக கிராமப்புறங்களில் உள்ள பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் வெற்றிலை போடும் போது பாக்குடன் சேர்த்து சாப்பிடுவார்கள்.

கோடை காலத்தில் வெளியே சென்று திரும்பிய பின்னர் இரண்டு அல்லது மூன்று கொட்டை பாக்கை எடுத்துக் கொண்டு வாயில் போட்டு மென்று விழுங்கி சுமார் மூன்று டம்ளர் தண்ணீரை குடித்தால் இரண்டு முதல் மூன்று நிமிடத்திற்குள்ளாகவே நீர்க்கடுப்பு பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். இதன் மூலமாக நமது உடலில் ஏற்பட்ட வெப்ப மாற்றங்களும் சரிசெய்யப்பட்டு நமது உடலானது பாதுகாக்கப்படும்.