சேலத்தில் ரவுடிகளை ஒழிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சமீப காலமாக ஏராளமான ரவுடிகள், குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த நபர்களை காவல் துறையினர் கைது செய்துவருகின்றனர். அவ்வகையில் பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல் வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கதிர்வேல் என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், சேலம் காரிப்பட்டியில் கதிர்வேலை காவல் துறையினர் இன்று சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது காவல் துறையினரிடம் கதிர்வேல் மோதலில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த மோதலின்போது காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் கதிர்வேல் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் சேலம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.