அந்நிய செலாவணி வழக்கில் வருகின்ற மே மாதம் 13ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அந்நியச் செலாவணி வழக்கில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவினை பெங்களூர் பரப்பன அக்ரகார சிறைச்சாலைக்கு நீதிமன்றம் அனுப்பி உள்ளது.
அந்நிய செலாவணி வழக்கு தொடர்பான நீதிபதி கேள்விகளுக்கு சசிகலா நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சசிகலா வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.