வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், அதிதீவிர புயலாக உருமாறியுள்ளது. ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஃபானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கடலூர் சில்வர் பீச்சில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் கடலில் இறங்க போலீசார் தடை வித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது.
இந்நிலையில், நாளை 5 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சந்திரகாச்சி – சென்ட்ரல், ஹவுரா – யஷ்வந்த்பூர், ஹவுரா – சென்ட்ரல், பாட்னா – எர்ணாகுளம், யஷ்வந்த்பூர் – ஹவுரா, பெங்களூர் கண்டோன்மெண்ட் – அகர்தலா விரைவு ரயில்கள் ரத்து.
நாளை மறுநாள் சென்ட்ரல் – சந்திரகாச்சி, மங்களூர் – சந்திரகாச்சி மற்றும் விழுப்புரம் – புருலியா விரைவு ரயில்கள் ரத்து.
வரும் 5-ம் தேதி ராமேஸ்வரம் – புவனேஸ்வர், கொச்சிவேலி – கவுகாத்தி விரைவு ரத்து
வரும் 7-ம் தேதி திருவனந்தபுரம் – சில்சார் அரோனை விரைவு ரயில்கள் ரத்து.