குண்டுவெடிப்பு வழக்கில் கைதான நபரின் பேஸ்புக் பதிவுகள்… தமிழிலும் இருந்த வாசகம்

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட கேரள இளைஞரின் பேஸ்புக் பதிவுகள் அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர் என கேரளாவை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் கைது செய்யப்பட்டார்.

ரியாஸ் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தி ஆஜர் படுத்தப்பட்டு 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் ரியாஸ் அபுபக்கரின் பேஸ்புக் பதிவுகள் சில அதிர்ச்சி தருவதாக உள்ளன.

அதாவது அவரின் பேஸ்புக்கில் தமிழ் வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. இதோடு ஆப்கன், சிரியா குறித்த வாசகங்களையும் பதிவிட்டுள்ளார்.

மேலும், இஸ்லாம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும், இஸ்லாமியர்களை கொலை செய்யலாம் ஆனால், இஸ்லாமை கொலை செய்ய முடியாது உள்ளிட்ட வாசகங்களையும் பதிவிட்டுள்ளார்.

இதோடு ஏராளமான படங்கள் மற்றும் தன் மனதில் இருக்கும் கருத்துக்களை சொல்லும் வாசகங்களையும் பதிவிட்டுள்ளார்.