இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் திடீர் கோடீஸ்வராரானது எப்படி என்பது குறித்து புகார் கொடுக்கப்பட்டதால், வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இ.சி.சி. சாலையில் பெரிய பங்களா ஒன்றை சுமார் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி குடியேறியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு எப்படி இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் அளவிற்கு பணம் கிடைத்தது? என்பது குறித்து தொடர் புகார்கள் வருமான வரித்துறையினருக்கு சென்றுள்ளது.
இதனால் வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, அவரது வீட்டில் இருந்து 7 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது, 2 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு அறிமுகமான 72 வயது அமெரிக்க பெண்ணின் தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வருவதாகவும், அதன் மூலம் சொத்துக்களை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.