இன்றைய ராசிபலன் (03/05/2019)

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மரியாதை கிடைக்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • கடகம்

    கடகம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். புது முதலீடுகளை தவிர்க்கவும். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

  • கன்னி

    கன்னி:  சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • துலாம்

    துலாம்:  எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். ஆரவாரமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: பழைய பிரச்னைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி
    களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உயர்வு பெறும் நாள்.

  • மகரம்

    மகரம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: மாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.