இமய மலையில் அலைந்து திரியும் அருவருப்பான உருவம்!

இமயமலைத் தொடர்களில் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் மர்மங்கள் நிறைந்த அதிசய மனிதன் வாழ்ந்துவருவதாக தகவல்கள் வருகின்றன.

சராசரி மனிதனைக் காட்டிலும் 2 மடங்கு பெரிய உடல் கொண்ட, பார்ப்பதற்கே அருவருப்பான முகமும், பெரிய கொம்புகளும் கொண்டு மனித உருவில் கரடியைப் போலவும் அந்த மர்ம மனிதன் காணப்படுகின்றான்.

மர்மங்கள், அமானுஷ்யங்கள் மற்றும் புதிர்கள் என எதிவாக இருந்தாலும் அதை கேட்பவர்கள் ஆராயத் தொடங்கிவிடுவார்கள்.

அந்த வகையில் இங்கு நாம் பார்க்கவிருப்பது பனிக்கரடி மனிதனை பற்றி….

கரடியைப் போல உருவமைப்பு கொண்ட மர்ம மனிதன் இப்படித்தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எட்டி என்ற பெயர் கொண்ட இந்த மர்ம மனிதன் இமயமலைப் பகுதியில் வாழ்ந்து வருவதாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்பவர்கள் நம்புகின்றனர்.

மனிதக் கரடியைப் போலிருந்தாலும் இவனுக்கு ஒற்றைக் கண்ணும், அகன்ற காதுகளும் இருப்பதாகவும், அதை நேரில் பார்த்திருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் அந்த மனிதனுக்கு இரண்டு கண்கள் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த மர்ம மனிதனை பார்க்கவே அருவறுப்பாக காட்சியளிக்கும் பனி மனிதன் என்று குறிப்பிடுகின்றனர்.

எங்கெல்லாம் வாழ்கிறான் தெரியுமா?

வானரம் போன்ற உருவத் தோற்றமும் சராசரி மனிதனை விட இருமடங்கு அதிக உயரமும் கொண்டு இமயமலையில் இந்த மனிதன் வசிக்கிறான் என்று நேபாளம், பூடான், திபெத் பகுதிகளில் நம்பப்படுகிறது.

பொதுவாகவே மனிதர்கள் 100 ஆண்டுகளை கடந்து வாழ்வது அரிதிலும் அரிது. ஆனால் இந்த மர்ம மனிதன் நூற்றாண்டுகள் கடந்து வாழ்வதாக நம்பப்படுகிறது.

ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை

இந்த மர்மத்தை பற்றிய சுவாரசியமான விசயம் என்னவென்றால், அறிவியலாளர்கள் சிலர் ரோமங்களைக் கொண்டு செய்த மரபியல் ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் உண்மை தெரியவந்தது.

நீளமான கை, கால்களையுடைய, உடல் முழுவதும் ரோமங்கள், முதுகுதண்டு கொண்ட கரடியைப் போன்ற பெரிய உருவம் ஒன்று இமயமலையில் வாழ்கிறது அல்லது வாழ்ந்துள்ளது என்பதே ஆராய்ச்சியில் வந்த உண்மை.

புராணகால பனிக்கரடி என சொல்லப்படும் ஒரு உயிரினத்துடன் ஒப்பிடுகையில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

பனிமனிதன் கரடி

மனிதன் மர்ம மனிதனைப் பற்றிய தகவல்கள் பல்வேறு விதத்தில் பேசப்பட்டு வந்தாலும், இன்றுவரை அதிகாரப் பூர்வமாக எந்த அறிக்கையும் நமக்கு கிடைக்கவில்லை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் நம்பிக்கை என்ற ஒன்று எப்போதும் மதிக்கப்படவேண்டியதே.

கடவுள்கள் கூட அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லைதானே.