சின்ன திரையில் இருந்து வெள்ளி திரை சென்ற பிரபல நடிகை மௌனி ராயின் நடன வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் வெற்றிநடை போட்ட போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்த நாகினி தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் கால் பதித்தார்.
அக்ஷய் குமார் நடிப்பில் கோல்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது ‘RAW: Romeo Akbar Walter’ என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், ரன்பீர் கபூர், அலியா பட், தெலுங்கு மெகா ஸ்டார் நாகர்ஜூனா நடிப்பில் உறுவாகி வரும் ப்ரிமஹஸ்த்ரா திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் மௌனி ராய். தற்போது பாலிவுட்டில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ள இவர் பிஸியாக வலம் வரும் அதவேளையில் பிஸி செடியுல்களுக்கு இடையில் கேலிக்கைகளிலும் நேரம் செலவிட்டு வருகின்றார்.
View this post on Instagram
If you don’t have your dancing shoes, dance barefoot? Good day babies ❤️☀️
அந்த வகையில் தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மௌனி ராய், தமிழகத்தில் இருந்து பாலிவுட் சென்று தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த ஸ்ரீ தேவியின் இந்தி பாடல் ஒன்றுக்கு நடமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.