பள்ளி மாணவிகளை சீரழித்து கொலை செய்து கிணற்றில் உடலை வீசிய காம கொடூரன்.!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதமான சூழ்நிலையில் பெண்கள் குழந்தையாய் பிறந்த நாட்கள் முதலாகவே தங்களின் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் இன்று உள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டும்., அதனால் பல பெண்களின் தங்களின் வாழ்க்கையை இழந்தும் செய்வதறியாது தற்போது வரை தனக்கு நடந்த அநீதியை வெளியே சொல்லும் பட்சத்தில்., அக்கம் பக்கத்தின் ஏளன பேச்சில் உயிரை விடவும் செய்கிறது.

இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் யாதகிரி மாவட்டத்தில் இருக்கும் ஹாஜிபூர் கிராமத்தை சார்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயின்று வருகிறார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில்., இவரை தேடி அலைந்த பெற்றோர் இவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்ற காரணத்தால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இவர்களின் புகாரை பெற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., மாணவியின் புத்தகப்பை அங்குள்ள பாழடைந்த கிணற்றின் அருகே இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினரை தொடர்பு கொண்ட காவல் துறையினர் விஷயத்தை கூறி., சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அந்த நேரத்தில் சிறுமியின் உடலானது கிணற்றில் இருந்துள்ளது.

கிணற்றில் இருந்து சிறுமியின் உடலை கண்டெடுத்த பின்னர் கிணற்று உரிமையாளர் சீனிவாசனை அழைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த நேரத்தில்., அப்பகுதிக்கு பேருந்து வசதி இல்லாததை தொடர்ந்து., மாணவிகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளான். இந்த நிலையில்., தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து., பின்னர் அவர்களை கொலை செய்து உடலை மறைப்பதற்கு கிணற்றுக்குள் வீசியது தெரியவந்தது.

இதுமட்டுமல்லாது கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னதாக மோனிஷா என்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கிணற்றில் வீசியதும்., கடந்த நான்கு வருடத்தில் சுமார் 2 பெண்களையும் வலுக்கட்டாயமாக சீரழித்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. இதனையறிந்த காவல் துறையினர் சீனிவாசனிடம் தொடர் விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில்., அவனது இணையப்பக்கத்தை சோதனை செய்ததில் சுமார் 600 பெண் நண்பர்கள் மட்டும் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்த தீவிர விசாரணையிலும்., மேலும் இவனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்ற தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.