இந்தியாவின் கிரிக்கெட் அணியினுடைய முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் குல்தீப் யாதவ். இவர் தற்போது ரிஸ்ட் ஸ்பின்னராக ஐ.பி.எல் போட்டியில் உள்ள கொல்கத்தா அணியின் சார்பில் விளையாடி வருகிறார். ஆனால் தற்போது இவர் விளையாண்டு வரும் போட்டியில் இவரது பந்து வீச்சானது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இவர் ராயல் சேலஞ்சஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தின் பொது சுமார் 59 ரன்களை விட்டுக்கொடுத்தன் விளைவாக கடைசியாக நடைபெற்ற சுமார் மூன்று போட்டிகளில் இவர் களத்தில் இறக்கப்படவில்லை., இது அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அனைவரும் நினைத்திருந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த கல்லீஸ் டி 20 போட்டிகள் என்பது வேறு என்றும்., உலகக்கோப்பை போட்டிகள் வேறு என்று தெரிவித்துள்ளார்.
மேலும்., குல்தீப் யாதவ் குறித்து கல்லீஸ் தெரிவித்தாவது., தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஈடன் கார்டன் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சானது மிகவும் கடினமாக இருந்தது., குல்தீப்பிற்கு இந்த வருடம் மிகவும் கடினமாக அமைத்துள்ளது. இதில் இருந்து அவர் நல்ல பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாது 20 ஓவர்கள் உள்ள கிரிக்கெட் விளையாட்டிற்கும்., 50 ஓவர்கள் உள்ள விளையாட்டிற்கும் அதிகளவு வித்தியாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதைய அணியில் இருந்து நீக்கியது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் எண்ணவில்லை.
சரியான அணியை உருவாக்கும் சூழ்நிலையின் காரணமாக அவரால் அணியில் சேர இயலவில்லை., இவர் இந்த அணியில் இடம்பெறாமல் போனாலும் உலக கோப்பை கிரிக்கெட்டின் போது அவர் தயாராக இருப்பார் என்று தெரிவித்தார்.