இந்தியாவில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மனைவி முதலிரவுக்கு மறுத்ததால், கணவன் அவரை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியைச் சேர்ந்தவர் Dharmendra Sharma. இவருக்கும் அகமதாபாத்தைச் சேர்ந்த Priyanka Tiwari என்பவருக்கும் கடந்த 27-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த நிலையில் இருவரும் 29-ஆம் திகதி டெல்லி திரும்பியுள்ளனர். அப்போது ஷர்மா மற்றும் திவாரிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஷர்மா அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின் இது குறித்து அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க பொலிசார் ஷர்மாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், திருமணம் நடந்த அன்று இரவு நெருக்கமாக இருப்பதற்காக ஷர்மா அழைத்ததாகவும், ஆனால் திருமண அழுப்பு காரணமாக திவாரி அதற்கு ஒத்துழைக்காததால், அவரை வீட்டிற்கு வந்த பின் அடித்ததாக கூறப்படுகிறது.
அறையில் இருந்து வந்த சத்ததை கேட்டவுடன் மாமனார் மற்றும் மாமியார் வந்து தடுத்துள்ளனர். மேலும் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.