உயிரைப் பறிக்கும் குழி உயிரைக் காப்பாற்றிய அதிசயம்…

தினந்தோறும் சாலையில் வாகனங்களை ஓட்டிப் போகிறோம் வருகிறோம். ஒவ்வொரு நாளும் எதிர்பாராத விதமாக நிறைய விபத்துகளையும் கண்கூடாக பார்க்கத்தான் செய்கிறோம். அதிலும் நம் நாட்டில் நிறைய விபத்துகள் ஏற்பட சாலையின் மோசமான நிலையே காரணமாக அமைகிறது. ரோட்டில் இருக்கும் குழிகள், அதில் தேங்கி நிற்கும் மழைநீர் போன்ற பிரச்சினைகளே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ரோட்டில் இருந்த குழியில் விட்டு வண்டி தடுமாறியதால் விபத்து என்று நிறைய செய்திகளை பக்கம் பக்கமாக படிக்கிறோம்,கேட்கிறோம். இப்படி ஏகப்பட்ட ரிப்போர்ட் இருந்தாலும் தற்போது ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது. ரோட்டில் இருந்த குழிகளால் ஒருவர் உயிர் பிழைத்து உள்ளார். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்பதை பார்க்கலாம்.

கிரேட்னா என்ற மலேசியாவை சேர்ந்த 59 வயது பெரியவர் வேகமான இதயத் துடிப்பு காரணமாக ஆம்புலன்ஸில் அவசர அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரது இதயத் துடிப்பு 200 பீட்ஸ் /நிமிடங்கள் ஆக இருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம் போகும் வழியில் இருந்த சாலை குழிகளில் வண்டி வேகமாகச் ஏறிச் சென்றதால் அவரின் இதயத் துடிப்பு நார்மலாகி உள்ளது. இதனால் அவர் உயிரும் பிழைத்து உள்ளார்.

சாலையில் உள்ள குழிகள் இதயத்திற்கு எலக்ட்ரிக்கல் ஷாக் மாதிரி செயல்படுகிறது. இதனால் அவரின் இதயத் துடிப்பு பழைய நிலைக்கு வந்துள்ளது. மருத்துவமனையில் கொடுக்கப்படும் எலக்ட்ரிக்கல் ஷாக்கை சாலை குழிகளே செய்துள்ளது என்று மருத்துவர்கள் ஆச்சர்யமாக கூறியுள்ளனர்.