தற்கொலை தாக்குதலுக்கு முயன்ற தற்கொலைதாரி! ஏமாற்றத்தால் தடுமாறிய தருணம்

இலங்கையில் கடந்த மாத இறுதிப்பகுதியில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்த சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்க முடியாமல் தடுமாறிய தீவிரவாதியின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்ற 36 வயதான குண்டுத்தாரி, தற்கொலை குண்டுடன் ஹோட்டலில் சுற்றித் திரிந்துள்ளார். எனினும் அவரது வெடி குண்டு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குள் செயலிழந்துள்ளது.

அதிகளவான வெளிநாட்டவர்கள் தமது காலை உணவினை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் வெடிகுண்டை வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது பல முறை லதீப் அதனை வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார். எனினும் அவரால் முடியவில்லை.

இதனால் கோபமாக சென்று அங்குள்ள நாற்காலியில் அமர்கின்றார். அங்கும் முயற்சி செய்து பார்க்கின்றார். எனினும் அவரால் அதனை இயக்க முடியவில்லை.

பின்னர் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகிலுள்ள சிறிய விடுதிக்கு சென்று தனது குண்டை வெடிக்க செய்து உயிரிழந்துள்ளார்.

இலக்கு வைத்த திட்டங்களுக்கமைய லதீப் மாத்திரமே தோல்வியடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

லதீப் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவராகும். பின்னர் லண்டனில் தனது பட்டப்படிப்பை முடித்தவர் என சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.