இலங்கையில் தீவிரவாதிகள் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயங்களுடன் தப்பிய சிறுவனின் புகைப்படம் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சை நொறுக்கியுள்ளது.
ஈஸ்டர் நாளில் இலங்கையில் உள்ள 3 தேவாலயங்களில் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்த நூற்றுக்கணக்கான சிறார்கள் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
அதில் ஒரு சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியாகி பார்ப்பவர்களின் இதயத்தை நொறுக்கியுள்ளது.
இருதயராஜ் ஷந்தோஷ் என்ற அந்த 10 வயது சிறுவன் சம்பவத்தின்போது சியோன் தேவாலயத்தில் இருந்து மறைக்கல்வி முடித்து வெளியே வந்துள்ளான்.
அப்போது அந்த தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் படுகாயங்களுடன் இருதயராஜ் உயிர்தப்பியுள்ளான். சிறுவனின் முகம் சிதைந்து, உருக்குலைந்து தற்போது தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருதயராஜை அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் 10 வயது அஷயல் ரோஸாரியோ பலத்த கட்டுகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மட்டுமின்றி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருக்கும் ஷங்கர் நெருகேஷ்.
சீயோன் தேவாலய தாக்குதலில் தமது மனைவி மற்றும் மகளை இழந்த தஷான் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தமது 6 வயது மகனுடன் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
உலக மக்களை நடுக்கிய அந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பான தகவல் முதன் முதலாக காலை 8.45 மணிக்கு வெளியானது.
தொடர்ந்து அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹொட்டல்களின் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
முதற்கட்ட விசாரணையில் பிரித்தானியாவில் கல்வி பயின்றவர் உள்ளிட்ட 9 தீவிரவாதிகள் ஒன்றிணைந்து இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டது அம்பலமானது.
இந்த தாக்குதலுக்கு தெளஹீத் ஜமாத் அமைப்பு காரணம் என இலங்கை அரசு குற்றம்சாட்டினாலும்,
தாக்குதல் நடந்து 52 மணி நேரத்திற்கு பின்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது பொறுப்பெற்றுக் கொண்டது.
குறித்த தாக்குதலில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்டதுடன், சிறார்கள் உள்ளிட்ட 500-கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.