தமிழகத்தின் பெரம்பலூரில் 8 ஆண்டுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்எல்ஏவை அழைத்து விசாரிக்காமல் புகார் கொடுத்தவர்களை பொலிசார் கைது செய்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை வரவழைத்து தங்களின் ஆசைக்கு இணங்க வைத்து அதை வீடியோ எடுத்து வைத்து தொல்லை கொடுத்து வந்ததாக ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் மற்றும் சிலர் மீது அருள் என்பவர் பெரம்பலூர் எஸ்பிடம் புகார் செய்தார்.
இதையடுத்து, கடந்த 25 ஆம் திகதி பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஓடியோவை அருள் வெளியிட்டார். அதில், வேலை வாங்கி தருவதாக கூறி இன்டர்வியூவுக்கு அழைத்து அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கு இணங்குமாறு தன்னை மிரட்டி அனுப்பி வைத்தனர் என்று பாதிக்கப்பட்ட பெண் கதறினார்.3
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் வக்கீல் காமராசு என்பவர் பெரம்பலூர் எஸ்பியிடம் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 30 ஆம் திகதி வக்கீல் அருளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அனைத்து மகளிர் பொலிசார் கைது செய்தனர்.
கைதான அருள், ‘நான் வெளியே வந்து மேலும் பல ஆதாரங்களை வெளியிடுவேன்’ என்று கூறியதால் ஓராண்டு வெளியே வரமுடியாதவாறு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்காக அவர் மீது வேறு புகார்கள் இருக்கிறதா என்று பொலிசார் பழைய வழக்குகளை தூசி தட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏவுக்கு பெண்களை அனுப்புவதில் தரகராக செயல்பட்ட போலி நிருபர் ஒருவர் இப்போது தலைமறைவாகி விட்டார்.
இவர்தான் வேலை கேட்டு வரும் பெண்களில் அழகானவர்களை தெரிவு செய்து ஆசைக்கு இணங்கினால் அரசு வேலை கிடைக்கும், உதவிகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி எம்.எல்.ஏவுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
கடந்த 8 வருடத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி சீரழிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் அம்பலமாகியுள்ளது.