அனைத்து பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விடயம்!

தூர சேவைகளில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளிலும் GPS தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.

Mobile GPS navigation, travel and tourism concept: macro view of modern black glossy touchscreen smartphone with GPS navigation application, magnetic compass, pen and group of pushpins on world map with selective focus effect

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாரதிகளின் ஒழுக்க விதிமுறைகளை பாதுகாத்தல் மற்றும் கவனயீனத்துடன் அதிக வேகத்தில் பயணிப்பதை தவிர்த்தலே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

இதன் பிரகாரம், தூர சேவைகளில் ஈடுபடும் 4,000 பேருந்துகளுக்கு GPS தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.