ஹாங்காங்கை சேர்ந்த மிக பெரிய கோடீஸ்வரரான Wu Zhicheng-ஐ திருமணம் செய்து கொண்ட இளம் பெண் அவரை திருமணம் செய்த 9 மாதத்தில் விவாகரத்து செய்துள்ளார்.
ஹாங்காங்கை சேர்ந்த கோடீஸ்வரர் Wu Zhicheng (67). இவரின் சொத்துமதிப்பு $520 மில்லியன் ஆகும்.
இந்நிலையில் இளம் நடிகையான Katherine Ho (27) என்பவரை Zhicheng கடந்த 2014-ல் சந்தித்தார்.
முதல் முறை Katherine-ஐ பார்த்த உடனேயே கோடீஸ்வரர் Zhicheng-க்கு அவரை பிடித்து விட்டது.
இதையடுத்து $3.1 மில்லியன் மதிப்புள்ள வீடு மற்றும் வைர நகைகளை அவருக்கு Zhicheng பரிசளித்தார்.
பின்னர் இருவரும் டேட்டிங் சென்ற நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தன்னை விட 40 வயது குறைவான Katherine-ஐ Zhicheng திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக Katherine தற்போது அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக எப்போதும் இருப்போம் என்றும் கூறியுள்ளார்.
Katherine தான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை முன்னர் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
இதிலிருந்து தான் Zhicheng – Katherine உறவில் முதன் முதலில் விரிசல் விழ தொடங்கியதாக சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.