காதலியை எரிந்த நிலையில் பிணமாக சாலையில் வீசிய கொடூரம்.!!

புதுச்சேரி மாநிலத்தின் எல்லை பகுதியில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆரோவில் உள்ள குலாப்பாளையத்தை சார்ந்த பகுதியில் உள்ள சாலையில் முந்திரிக்காட்டிற்கு அருகில் கடந்த 30 ம் தேதியன்று எறிந்த நிலையில்., பெண்ணின் பிணம் ஒன்று இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கிய நிலையில்., தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்., நேற்று காலையில் அங்குள்ள ஆரோ காவல் நிலையத்திற்கு வருகை தந்த வாலிபர் தனது பெயர் அப்பாதுரை என்றும்., மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்., தனது அக்காவின் பெயர் லட்சுமி என்றும்., கடந்த இரன்டு நாட்களாக காணாததால் அவரை தேடி அலைந்தோம். அவரை எங்களால் கண்டறிய முடியவில்லை., செய்தித்தாளில் முந்திரிக்காடு அருகே இளம்பெண்ணின் பிணம் எறிந்த நிலையில் உள்ளதாக படித்தேன்., அது யார் என்பது குறித்து கேட்டறிய வந்ததாக தெரிவித்தார்.

இதனை அறிந்த காவல் துறையினர் அப்பாதுரை மற்றும் அவரது தாயார் மனோ ரஞ்சிதம்., அப்பாத்துரையின் சகோதரி இருவரையும் அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த இளம்பெண்ணின் உடலை காண்பித்த போது., கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக காணாமல் போன லட்சுமி என்று கூறி கதறியழுத்தனர்.

இது குறித்த விசாரணையின் போது., லட்சுமி புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பாத்திரக்கடையில் பணியாற்றி வந்த சமயத்தில்., அங்குள்ள கென்னடி நகர் பகுதியை சார்ந்த மினி வேன் ஓட்டுநராக பணியாற்றி வரும் அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., கடந்த 29 ம் தேதியன்று பணிக்கு சென்று வருவதாக கூறியவர் மீண்டும் வீட்டிற்கு திருப்பவில்லை என்ற தகவல் தெரியவந்தது.

இதனை அறிந்த காவல் துறையினர் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்., அருண்குமார் அவனது நண்பருடன் சேர்த்து லட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில்., கடந்த 29 ம் தேதியன்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பெண்ணை அழைத்த அருண் அவரிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து தனது நண்பரான அப்துல் ரகீமிற்கும் தொடர்பு கொண்டு வரசொலியுள்ளார்.

இவர்கள் இருவரின் சந்திப்பில் நெருங்கி பழகிய காரணத்தால் தாம் கர்ப்பமாக இருப்பதாகவும்., தம்மை திருமணம் செய்துகொள்ளுமாறும் லட்சுமி கூறவே., இதனை கேட்ட அருண் உனது கர்ப்பத்திற்கு நான் காரணமில்லை என்று கூறி., திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து., லட்சுமியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து., அருண் அடித்ததில் லட்சுமி சம்பவ இடத்தில மயங்கியுள்ளார்.

இதனை பார்த்து பதறிப்போன அருண் மற்றும் அப்துல் அவரை மோட்டார் வாகனத்தின் நடுவில் வைத்து அழைத்து சென்று அங்குள்ள முந்திரிக்காட்டிற்கு கொண்டு சென்று மோட்டார் வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஊற்றி கொலை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழ்நிலையில்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.