ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் இவரது மகள் பர்வின் பாவி வயது (23) இவர் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வருகிறார். இவர் 2017-ம் ஆண்டு தமிழக போலீசில் பணியில் சேர்ந்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வருகிறார்.
பெண் காவலர் பர்வின் பாவி நல்லூர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மிண்ணனு வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மதியம் 2:30 மணி அளவில் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் இரவு 7:30 மணி அளவில் திடீரென மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து உள்ளார். உடனே மயங்கி விழுந்த அவரை அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் காவலர் பர்வீன் பாவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் மாவட்டபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண் காவலர் பர்வீன் பாவியின் தற்கொலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் வெளியாகியுள்ளது. பர்வீன் பாபி, கடந்த 6 மாதமாக தன்னுடன் பணியாற்றும் காவலர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் அடுத்த 4 மாதத்தில் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். இதற்கிடையில் பர்வீன் பாபி தனது காதலனை செல்போனில் பேசும்போது வாடா.. போடா.. என்றும் அதேபோல் அதிகாரிகள் முன்னிலையிலும் அழைத்ததாக கூறப்படுகிறது. இது பர்வினின் காதலனுக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பர்வீன் பாபியின் வீட்டிற்கு வந்த அவரது காதலர், பர்வினின் தாயிடம், உங்கள் மகள் என்னை போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மரியாதை குறைவாக பேசுகிறார். அவரிடம் பொது இடத்தில மரியாதையாக பேசும்படி அறிவுரை கூறுங்கள் என கூறியுள்ளார்.
அப்போது அங்கு வீட்டிற்கு வந்த பர்வீன் பாபிக்கும், அவருடைய காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய காதலர் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த பர்வீன் பாபி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிதுநேரத்தில் தான் விஷம் குடித்த விவரத்தை தாயாரிடம் தெரிவித்துவிட்டு மயங்கி விழுந்தார். மேலும் இது குறித்து திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.